ஜாமின் கேட்டு கதறிய மீராமிதுன்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு!

பிக்பாஸ் பிரபலம் சூப்பர் மாடல் மீரா மிதுன் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதில் வல்லவர். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் அவதூறாக, தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என பலர் புகார் அளித்தனர். இதனால், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்தார்.

இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யும்போது தன்னை கைது செய்தால் தற்கொலை செய்துவிடுவேன் என போலீசாரை மிரட்டினார். மேலும் அவருக்கு துணையாக இருந்த அவரது ஆண் நண்பரும் கைது செய்யபட்டார்.

இதனிடையே, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அவர் வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி தவறாக பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் கூறினார்.

தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

meera-mithun
meera-mithun

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதிபதி ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News