தமிழகத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக அவருடைய ரசிகர்கள் வரும் 13ஆம் தேதியான பொங்கலுக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்த சூழலில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்று,
மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் வழக்கம் போல் இல்லாமல் கூடுதல் காட்சிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
வழக்கமாக முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.
ஆனால் மாஸ்டர் திரைப்படத்திற்கு வரும் 13ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் கூடுதலாக திரையிடுவதற்கு, திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆகையால் பொங்கல் பண்டிகையை தாறுமாறாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நள்ளிரவு 1:00 மணி காட்சிக்கும், 4:00 மணி காட்சிக்கும் முன்பதிவிற்கு அதிக ஆர்வம் காட்டி உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் வசூலை தட்டிச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.