பேட்ட படத்திலிருந்து மாஸ்டர் படத்தை பட்டி டிங்கரிங் செய்த லோகேஷ் கனகராஜ்.. ஒத்துப்போகும் 22 காட்சிகள்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ஒன்றும் குறை வைக்கவில்லை.

படம் தியேட்டரில் வெளியாகுமா, இல்லையா அல்லது அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகுமா என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி பின்னர் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இந்நிலையில் சமீபகாலமாக இணையதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான பேட்ட படத்திலிருந்து நிறைய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் காப்பியடித்துள்ளதாக பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

meme-01
meme-01

அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 22 காட்சிகளுக்கு மேல் பேட்டை படத்துடன் மாஸ்டர் படத்தின் காட்சிகள் ஒத்துப் போகிறதாம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் ஹாலிவுட் காப்பி என விமர்சனம் வந்த நிலையில் தற்போது பேட்ட படத்திலிருந்து மாஸ்டர் பட்டத்தை தூக்கியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

meme-02
meme-02

ஏற்கனவே மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்ற ஒரு கருத்து நீண்ட நாட்களாக விஜய்யின் மூளையை குடைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பேட்ட பிரச்சனையும் கூட சேர்ந்துள்ளதாம்.

meme-03
meme-03

இதனால் தளபதி விஜய் மிகவும் அப்செட்டில் உள்ளாராம். வழக்கமாக இந்த மாதிரி பிரச்சனைகளை பெரிதாக கண்டுகொள்ளாத விஜய்க்கு மாஸ்டர் விஷயம் நிறைய கஷ்டங்களை கொடுத்து வருவதாக தெரிகிறது.

meme-04
meme-04
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்