பரியேறும் பெருமாள் என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கர்ணன். தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்குதான் அடுத்த தேசிய விருது என இப்போதே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான கர்ணன் டீசர் தற்போது வரை யூடியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கர்ணன் படம் ஆரம்பித்ததிலிருந்தே அந்த படத்தின் மீதான ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர்.
சமீபத்தில்கூட வெளியான பண்டாரத்தி புராணம் என்ற பாடலில் பண்டாரத்தி என்ற பெயரை பயன்படுத்தியதால் படத்தை வெளியிடக் கூடாது என கோர்ட்டில் கேஸ் போட்டதெல்லாம் அநியாயம். அந்த வார்த்தையை அல்லது அந்த பாடலை படத்திலிருந்து தூக்கினால் தான் கர்ணன் படத்தை திரையில் வெளியிட முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டது படக்குழு.
ஏற்கனவே கர்ணன் படம் ஒரு குறிப்பிட்ட உண்மையைப் பேசும் என்ற பிம்பம் இருந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அந்த படத்திற்கு அரசியல் சார்ந்த பிரச்சனைகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறதாம்.
முன்னதாக பூஞ்சோலை எஸ்டேட் பிரச்சனையை பேசியதாக கூறினார். ஆனால் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் படத்தில் அப்படி எதுவுமில்லை எனவும் படம் பார்த்த பிறகு எந்த கருத்துக்கள் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது மாரி செல்வராஜ் படத்தின் ரிலீஸ் கருதி பண்டாரத்தின் புராணம் என்ற பாடலில் இடம்பெற்ற பண்டாரத்தி என்ற வார்த்தையை தூக்கிவிட்டு மஞ்சனத்தி என மாற்றி விட்டாராம். தேவதைகள் பெயரை மாற்றினாலும் அவர்கள் தேவதைகள் என்றே அழைக்கப்படுவார்கள் என்ற கருத்தையும் தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மற்றபடி ரசிகர்களோ இதெல்லாம் படத்திற்கு இலவச ப்ரோமோஷன் தான் என சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.