Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாடல் அழகி போட்டியில் கலந்து கொண்ட மணிமேகலை.. ப்பா யாருடா இந்த பொண்ணு இவ்வளவு மேக்கப் போட்டு இருக்கு

manimegalai vijay sethupathi

சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு தனது துறுதுறு பேச்சாலும், குறும்புத்தனமானசேட்டைகளாளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

சன் டிவியில் பணியாற்றி வந்த மணிமேகலை அதன் பிறகு விஜய் டிவியில் குடியேறினார். அங்கு இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி போட்டியாளராகவும் , தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் மூலம் பல கோடி ரசிகர்களுக்கு பிடித்து போகும் போட்டியாளராக மாறினார். அதுவும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

manimegalai

manimegalai

மணிமேகலை போல் அவரது கணவரும் திரைத் துறையைச் சேர்ந்தவர். இவர் நடன கலைஞராக ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது அவரது கணவரான உசைன் மணிமேகலை மாடல் அழகி போட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் “ப்பா யாருடா இந்த பொண்ணு இவ்வளவு மேக்கப் போட்டு இருக்கு” என்று கிண்டல் செய்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை மாடல் அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ளார இது நமக்கு தெரியாம போச்சே என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Continue Reading
To Top