Tamil Cinema News | சினிமா செய்திகள்
27 வயது வாரிசு நடிகருக்கு வில்லனாகும் மம்முட்டி.. யோசிச்சு முடிவெடுங்க என அறிவுறுத்தும் நண்பர்கள்

தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் குறிப்பிட்டுச் சொல்லும் நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. தற்போது 69 வயதை எட்டியிருக்கும் மம்முட்டி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் பலரும் வில்லனாக உருவெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்ததாக மம்முட்டியும் ஒரு இளம் நடிகருக்கு வில்லனாக போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவரது இரண்டு மகன்களும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அதில் நாக சைதன்யா ஏற்கனவே பிரபலமான நடிகராக மாறிவிட்டார்.

mammooty-cinemapettai-01
அவரை தொடர்ந்து அவரது தம்பியும் நாகார்ஜுனாவின் இரண்டாவது மகனுமான அகில் என்பவரும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
தெலுங்கு சினிமாவில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் கை ஓங்கி தான் இருக்கும். அந்த வகையில் தன்னுடைய மகனை மிகப்பெரிய ஹீரோவாக மாற்றுவதற்காக நட்பை பயன்படுத்தி மம்முட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் நாகர்ஜுனா.

akhil-cinemapettai
ஆனால் மம்முட்டியின் மலையாள நண்பர்களோ இப்போ வில்லனாக நடிப்பது சரி வராது எனவும், அது அடுத்தடுத்து நீங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் வரவேற்ப்பை குறைத்து விடும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்களாம்.
