இளம் வயதில் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்த 9 மலையாள பிரபலங்கள்.. உங்க பேவரைட் யாரு.?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே மற்ற மொழி நடிகர்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பது வழக்கம்தான். அப்படி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் பல படங்கள் பல்வேறு மொழியில் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழ் இயக்குனர்கள் பலரும் மற்ற மொழி நடிகர்களை படத்தில் நடிக்க வைக்க முன்வருகின்றனர்.

உதாரணத்திற்கு வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பகத் பாசில் நடித்திருப்பார்கள். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. அதே அளவிற்கு மலையாளத்தில் பகத் பாசிலுக்கும் வரவேற்பு இருக்கிறது. அதனால் தமிழ் பாக்ஸ் ஆபிஸில், மலையாள பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைத்தது.

தற்போது இந்த டெக்னிக்கை தான் பல இயக்குனர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளது யார் யார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பிரித்விராஜ்

prithiviraj

மொழி, ராவணன் மற்றும் காவியத்தலைவன் போன்ற ஒரு சில தமிழ் படங்கள் நடித்து தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார் பிரித்விராஜ். ஆனால் தற்போது மலையாள சினிமாவில் தான் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

 டோவினோ தாமஸ்

Tovino Thomas
Tovino Thomas

டோவினோ தாமஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து தனுஷ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு லூசிபர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இப்படம் தமிழ் மொழியில் டப் செய்து வெளியானது. இவர் தமிழ் படத்தில் நடித்ததை விட மலையாள படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

துல்கர் சல்மான்

dulquer-cinemapettai
dulquer-cinemapettai

வாய் மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். ஆனால் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரபலமானார். கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பிரபலமானார். தற்போது தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.

ஃபகத் பாசில்

fahadh-faasil-cinemapettai
fahadh-faasil-cinemapettai

விஜய் சேதுபதி படமான சூப்பர் டீலக்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் பிரபலமானார் ஃபகத் பாசில்.

நஸ்ரியா நசீம்

nazriya-001
nazriya-001

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் நஸ்ரியா நசீம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

நிவின் பாலி

nivin-pauly-cinemapettai
nivin-pauly-cinemapettai

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிவின் பாலி அறிமுகமானார். ஆனால் பிரேமம் படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். இவரது படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பார்வதி

parvathy-cinemapettai
parvathy-cinemapettai

பூ படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஆனால் மரியான் படத்தின் மூலம் கவனிக்கக்கூடிய நடிகையாக பிரபலமானார்.

ஸ்ரீநாத் பாஸி

Sreenath Bhasi
Sreenath Bhasi

மலையாள சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராக வலம் வருபவர் தான் ஸ்ரீநாத் பாஸி. வைரஸ், பரவா மற்றும் கப்பிலா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார்.

சோபின் ஷாகிர்

soubin shahir
soubin shahir

மலையாள சினிமாவில் தற்போது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருப்பவர் சோபின் ஷாகிர். இவரது நடிப்பில் வெளியான வைரஸ், சார்லி மற்றும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

மேற்கண்ட மலையாள நடிகர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதைவிட மலையாளத்தில் இவர்களுக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்ததால் தற்போது மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீநாத் பாஸி மற்றும்சோபின் ஷாகிர் இருவரும் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்கள் தெரியும் அளவிற்கு பிரபலமாகி உள்ளனர்.

Next Story

- Advertisement -