சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கேரளாவிலும் மாஸ் காட்டும் தளபதி.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பிரபல மலையாள நடிகர்!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இருக்கும் தளபதி விஜய் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குஷியாகி திரையரங்கை குவிகின்றனர். அந்த அளவிற்கு பிரபலமான தளபதி விஜய் உடைய படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தளபதி விஜய்யின் படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் படமாகவே கேரளாவின் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரசிகர்கள் தளபதி விஜய்க்கு கேரளாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் தேர்ந்தெடுக்கும் கதை. விஜய் நடிக்கும் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியும் என ரசிகர்கள் வாயார போற்றும் வகையில் தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய அற்புதமான நடிப்பு, நடனத்தை வெளி காட்டுகிறார் என்று மலையாள பிரபலம் பிரித்விராஜ் தளபதி விஜய்யை சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார்.

இப்படி மலையாள பிரபலமே தளபதி விஜய்யை மலையாள சூப்பர் ஸ்டாராக கூறியிருப்பது தளபதி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும் போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

தற்போது தமிழில் தலை காட்டாத பிரித்திவிராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் மோகன்லால் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை புகழ்வது பெரிய விஷயம். அதிலும் வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகர் என்று கூட பார்க்காமல் தளபதி விஜய்யை பிரித்விராஜ் பெருமையுடன் பேசியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

Trending News