மாளவிகா மோகனனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் விஜய்யை பார்த்து ரசிப்பார் மாளவிகா. ஆனால் ரசிகர்கள் அப்பாடலின் மாளவிகாவை பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர்.அந்த அளவிற்கு அழகாக அப்பாடலில் தெரிவார்.

malavika mohanan
malavika mohanan

பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதன்பிறகு யாருடன் எந்த படத்தில் நடிப்பார் எதிர்பார்த்த நிலையில் தனுஷுடன் D 43 என்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று அன்னையர் தினம் என்பதால் மாளவிகா மற்றும் அவரது அம்மா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்