வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ராக்கெட்ரி நம்பியாக மாதவன் செய்த காரியம்.. புரமோஷனுக்காக இப்படியா செய்வீங்க?

மாதவன் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படமான ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக மாதவன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் போல் சூர்யா இப்படத்திலும் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தின் ஷூட்டிங்குக்காக சூர்யா வந்தபோது நம்பி நாராயணன் கெட்டப்பில் இருந்த மாதவனையும், நம்பி நாராயணன் அவர்களையும் பார்த்து யார் ஒரிஜினல் என சிறுது நேரம் குழம்பி விட்டார்.

அந்த அளவுக்கு பார்ப்பதற்கு இருவரும் அச்சு அசலாக இருந்துள்ளனர். அந்த வீடியோவை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே அந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராக்கெட்ரி படத்தின் புரமோஷனுக்காக ஒரு புகைப்படத்தை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதாவது விஞ்ஞானி நம்பி கெட்டப்பில் இருக்கும் மாதவன் தனது மனைவிக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதும் நடிகர் மாதவனின் மனைவி சரிதாவின் தம்பி இந்த போட்டோவை பார்த்து குழம்பிவிட்டாராம்.

மேலும் இது மாதிரி புகைப்படத்தை மாதவன் முதல் முறையாக வெளியிட்டதால் படத்தின் புரமோஷனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்தது பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. இதனால் மாதவன் மீது சிலருக்கு அதிருப்தியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ராக்கெட்ரி படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் தற்போது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் பிரதமர் மோடி முதல் பல பிரபலங்கள் இப்படத்தைப் பற்றி பாராட்டி உள்ளனர். மேலும் ஹிந்தி ரசிகர்களை கவர இப்படத்தில் ஷாருக்கானும் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

Trending News