தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்த மாதவன்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். இவருக்கு ஆண்களைவிட பெண் ரசிகைகள் அதிகம். இவரை செல்லமாக மேடி என்று தான் அழைப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் மாதவன் நடித்துள்ளார். ஹிந்தி சினிமாவில் கோலோச்சிய தமிழ் நடிகர்களில் மாதவனும் ஒருவர். தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் தனியாக விமானத்தில் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டும் நடித்து வந்த மஞ்சு வாரியர் முதன்முறையாக அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் ஹிந்தியில் மாதவனுக்கு ஜோடியாக அமெரிக்கி பண்டிட் படத்தில் அறிமுகமாகிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு போபாலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் பயணிகளே இல்லாமல், தனியொரு ஆளாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள மாதவன் “ஒருபுறம் தனி ஆளாக பயணிப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் மற்றொரு புறம் சோகமாக இருக்கிறது. கொரோனா காலம் விரைவில் முடிவுக்கு வர பிராத்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்