ஜாதி பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார்களா பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ்? வெற்றிமாறனுக்கும் இதே பிரச்சனைதான்

இருபதாம் நூற்றாண்டில் சாதிகள் குறைந்து கொண்டிருக்கிறது என ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கையில் முன்னரை விட இப்போதுதான் சாதிகளும் சாதிப் பிரச்சனைகளும் அதிகமாகி வருகிறது என்பது போன்ற ரிப்போர்ட் கிடைத்துள்ளது.

இன்னும் ஜாதி கொலைகள் சம்பந்தப்பட்ட செய்திகளை தினமும் படித்து கொண்டு தானே இருக்கிறோம். இப்படி ஏற்கனவே ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் படம் எடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அதை தூண்டிக் கொண்டிருப்பது நியாயமா.

சமீபகாலமாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தங்களது படங்களில் பல சமூகத்தினரை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது படம் பார்ப்பவர்களுக்கு புரியாமல் இல்லை. அதுவும் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் காட்சி அமைப்புகளும் வசனங்களும் அமைந்து வருவதுதான் பதட்டப்படுத்துகிறது.

எவ்வளவு நாள்தான் கீழே இருப்பவர்களை மேலே இருப்பவர்கள் அடக்கி ஆள நினைப்பார்கள் என்பது போன்ற செய்தியை ரசிகர்கள் மனதிற்குள் ஆழமாக பதிய வைப்பது போல அவர்களது படங்கள் இருந்து வருகின்றன. அதற்கு பதிலாக படிப்பின் மூலமும், சாதனைகள் மூலமும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற வகையில் ஊக்குவிக்கலாமே.

pa-ranjith-maari-selvaraj
pa-ranjith-maari-selvaraj

வெற்றிமாறனின் அசுரன் படம் கூட பார்ப்பதற்கு ஒரு சமூகத்தினர் தாக்கிப் பேசுவது போல் இருந்தாலும் இறுதியில் நன்றாக படிக்க வேண்டும் என்ற சமூக கருத்தை ஆழமாக ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்தது. இப்படி படங்கள் எடுத்தால் கண்டிப்பாக பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றோர் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

vetrimaran-cinemapettai
vetrimaran-cinemapettai

இது போன்ற படங்களால்தான் மோகன் போன்ற இயக்குனர்கள் என் படம் ஜாதி படம்தான் என்று சொல்லியே படம் எடுக்கும் அவல நிலை தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் ஜாதி பார்த்து பழகும் பழக்கங்கள் குறைந்துவிட்டது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஒரு முறை பா ரஞ்சித் கூறுகையில்’ சென்னையில் வீடு வாடகைக்கு பார்க்க போனால் நீங்க மாட்டு கறி உண்பீர்களா என்று கேட்கிறார்கள் என்று கூறினார். அப்படி பார்த்தால் பலர் பிராமணர்களுக்கு மட்டும், சைவம் மட்டும் என வெளியிலேயே போர்டை தொங்க போட்டு வைத்துள்ளனர் அதையெல்லாம் சொல்லாமல் இருப்பது ஏன்?. எதிர்க்க வேண்டும் சண்டை போட வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக எப்படி படிக்க வேண்டும், எப்படி வாழ்கையில் முன்னேறி காமிக்க வேண்டும் என்று படம் எடுத்தால் கண்டிப்பாக அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் உதவியாக இருக்கும். ஏன் என்றால்? நீங்கள் வாழும் சொகுசு வாழ்க்கை அவர்களும் வாழ வேண்டும் அல்லவா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்