அதிலும் பட்டையை கிளப்பிய மாநாடு.. ஒரு மாதத்திற்குள் இவ்வளவு சாதனைகளா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டைம் லூப் என்கிற வித்யாசமான கதை அமைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் மாநாடு திரைப்படம் அதிக வசூலை பெற்று சாதனை புரிந்துள்ளது.

இப்படம் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே 108 கோடி வரை லாபம் பார்த்துள்ளது. தமிழில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற மாஸ்டர், டாக்டர், அண்ணாத்த திரைப்படங்களின் வசூலை விட மாநாடு திரைப்படத்தின் வசூல் அதிகம். இந்த சாதனையை படக்குழுவினர் அனைவரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக மாநாடு திரைப்படம் மற்றும் ஒரு சாதனையையும் தற்போது செய்துள்ளது. அதாவது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்படம் கடந்த வாரம் சோனிக் லைவ் ஒடிடி தளத்தில் வெளியானது.

இதுவரை ஓடிடி யில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே எதிர்பார்ப்புடன் மாநாடு திரைப்படமும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் இதுவரை வெளியான அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து முன்னிலையில் உள்ளது.

மாநாடு படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல் ஓடிடி யிலும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு பல சாதனைகளை புரிந்த படமாக மாநாடு படம் மாஸ் காட்டுகிறது. இந்த செய்தியால் பட தயாரிப்பாளர் உட்பட, பட குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்