கமலின் விக்ரம் படத்தில் முதல் விக்கெட் அவுட்.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் எந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் ஒன்று சேர்ந்தாரோ அப்போது இருந்தே அவருக்கான நேரம் சரியில்லை என்பது போல முதலில் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தனது குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தில் பணியாற்றி வருகிறார். விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து விருவிருப்பாக படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்தான் தேர்தல் என படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார்.

தற்போது தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு படத்தை ஆரம்பிக்கலாம் என்ற நேரத்தில் கொரானா பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இதனால் ஏற்கனவே படத்தை ஆரம்பிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் பெரிய அடி கொடுக்கும் வகையில் அவரது நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரிய ஒளிப்பதிவாளருமான சத்யன் சூரியன் என்பவர் இந்த படத்திலிருந்து விலகி விட்டாராம்.

லோகேஷின் மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்திலும் இவரது ஒளிப்பதிவு அனைவரையும் கவர்ந்தது.

இதனால் தற்போது கிரீஸ் கங்காதரன் என்பவரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாம் விக்ரம் பட குழு. ஏற்கனவே கமல், லோகேஷ் கனகராஜ் கதையில் மாற்றங்கள் சொன்னதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது நெருங்கிய டெக்னிசியன்களும் படத்திலிருந்து விலகுவது விக்ரம் படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

vikram-cinemapettai
vikram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்