தளபதி 67-ல் மிரட்ட வரும் ரோலக்ஸ்.. டிவிஸ்ட் வைத்து சொன்ன லோகேஷ் கனகராஜ்!

சில படங்களை மட்டுமே இயக்கினாலும், அவர் கையில் எடுப்பதெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் சினிமாவின் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் அதன்பின் தற்போது திரையரங்கில் பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம். இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்த படமான தளபதி விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் பக்கா மாசான படமாக உருவாக இருப்பதால், இந்த படத்தை குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா தனது மிரட்டலான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மீண்டும் தளபதி விஜய்யின் 67-வது படத்தில் இடம்பெறும் என்பதை நாசூக்காக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவருடைய படங்களில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோவான ஒருவரை மட்டுமே வைத்து இயக்க மாட்டார். அப்படித்தான் இவருடைய படங்களான கைதி படத்தில் நரேன்-கார்த்தி.

அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்-விஜய் சேதுபதி தற்போது வெளியாகி எடுக்கும் விக்ரம் படத்தில் கமலஹாசன்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-சூர்யா என பல பிரபலங்களை தன்னுடைய ஒரே படத்தில் நடிக்க வைத்திருப்பார். லோகேஷ் கனகராஜின் இந்த அணுகுமுறை ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனித்தனியாக இருக்கும் ரசிகர்களை ஒன்று சேர்ப்பது சினிமாவில் வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது.

ஆகையால் மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து தளபதி 67-வது படத்தில் விஜயுடன் சூர்யா இணையப் போவதாக வெளியாகியிருக்கும் இந்த செய்தி தளபதி மற்றும் சூர்யா ரசிகர்களிடையே வைரலாக பேசப்படுவதுடன் இந்தப் படத்தை குறித்த ஆர்வமும் ரசிகர்களிடையே எகிறிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்