விஜய்க்கு ஒரு குட்டி கதை என்றால் அஜித்துக்கு.? இன்று வரை போர்க்கொடி தூக்கும் அந்த ஒரு வார்த்தை

நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் சமகாலத்தில் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பிறகு தமிழ் திரையுலகின் அடுத்த ஜாம்பவான்களாக இருப்பவர்கள் இவர்கள் இருவர் தான். இப்போதைய கோலிவுட் வணிகத்தில் மாஸ் கலெக்சன் என்பது இவர்கள் இவருடைய படங்களுக்கு மட்டும் தான்.

என்ன தான் போட்டியாளர்களாக இருந்தாலும் தொடக்கத்தில் இவர்கள் இருவருடைய பாதையும் ஒரே மாதிரி தான் இருந்தது. படத்தில் மாஸாக, கிளாஸாக வசனங்கள் பேசினாலும், ஒரு பேட்டியிலோ அல்லது பொது மேடைகளிலோ பேச இருவரும் ரொம்பவே தயங்க கூடியவர்கள். நடிகர் விஜய்யெல்லாம் வாயை திறந்து பேச மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் அதிகம்.

Also Read: வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்

ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய்யின் சினிமா பாதை முற்றிலும் மாறிவிட்டது. சினிமாவையும் தாண்டி அவர் அரசியலில் களம் காணுவார் என்ற பிம்பம் உருவாகி விட்டது. தலைவா திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் மௌனம் கலைத்து விட்டார். இப்போது அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழா மேடைகள் எல்லாம் எதிரிகளுக்கு அவர் பதில் சொல்லும் மேடையாகி விட்டது.

பொதுவாக விஜய், அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஏதாவது ஒரு விழா மேடை என்று வந்துவிட்டால் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு குட்டி கதை சொல்லி முடிப்பார். அந்த குட்டி கதைகள் அடுத்த சில நாட்களுக்கு பயங்கர ட்ரெண்டாக இருக்கும். அதன் பின் அந்த குட்டி கதை பல சர்ச்சைகளை உண்டாக்கி அவரின் படத்திற்கு தலைவலியாக முடியும்.

Also Read: மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

நடிகர் அஜித் நீண்டகாலமாகவே மேடையில் ஒரு வார்த்தையை தவறாமல் சொல்லுவார்.ஆனால் அஜித் சொல்லும் வார்த்தைக்கு யாரும் போர்க்கொடி தூக்கியது இல்லை. அஜித் எப்போதுமே வாழு வாழ விடு என்று ஒரு மந்திரச் சொல்லை தான் பேசும் மேடைகளில் சொல்லி தன்னுடைய அதிருப்தியை தெரியப்படுத்துவார். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

உண்மையிலேயே அதற்கான காரணம் என்னவென்றால், நடிகர் அஜித் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை திட்டவட்டமாக முன்பே சொல்லிவிட்டார். விஜய் அப்படி இல்லை. அவருடைய மக்கள் இயக்கமாக இருக்கட்டும், படங்களில் வைக்கும் வசனங்களாக இருக்கட்டும் அரசியலுக்கான அவருடைய முன்னோட்டத்தை காட்டுவதால் தான் இத்தனை எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

Also Read: அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் பிசினஸ்.. சரண்டர் ஆன தயாரிப்பாளர், காற்றில் பறக்கும் தளபதியின் மானம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்