Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையை உலக்கை போல் மாற்றிய லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் மாஸ்டர்

சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி அதன் மூலம் ஹீரோ வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ் அவரைப் போலவே ராகவேந்திரா பக்தர் ஆவார். மேலும் இவர் சினிமாவை தாண்டி அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது பி வாசு, ரஜினி கூட்டணியல் வெளியான சந்திரமுகி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு வடிவேலுவின் நகைச்சுவை மிகவும் பக்கபலமாக அமைந்திருந்தது.
Also Read :தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி
இந்நிலையில் ரஜினி எப்போதுமே தான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிக்க விரும்ப மாட்டார். இதனால் சந்திரமுகி 2 படத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, சுபக்ஷா கிருஷ்ணா போன்றோர் நடிக்கின்றனர்.
சந்திரமுகி 2 படத்திற்காக லாரன்ஸ் தனது உடம்பை இரும்பு போல மாற்றி உள்ளார். மேலும் அவரது கைக்கு உலக்கை போல வலு சேர்த்து உள்ளார். இந்த புகைப்படத்தை லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இரண்டு விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
Also Read :அசுரத்தனமாக அவதாரம் எடுத்துள்ள லாரன்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்
அடடே என்ன ஒரு டிரான்ஸ்பர்மேஷன்

lawrence
சந்திரமுகி 2 படப்பிடிப்புக்காக தனது உடல் தோற்றத்தை அதிரடியாக மாற்ற சிவா மாஸ்டர் உதவி உள்ளார். இந்த சிறு முயற்சியை உங்களுடன் பகிர நான் விரும்பினேன். மேலும் இரண்டாவதாக இத்தனை ஆண்டுகளாக எனது அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு மிக்க நன்றி.
கையை உலக்கை போல் மாற்றிய லாரன்ஸ்

lawrence
இனிமேல் யாரும் எனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என கேட்டுள்ளார். ஏனென்றால் தற்போது நான் பல படங்களில் கமிட் ஆகி உள்ளேன். அதன்மூலம் அறக்கட்டளையை நடத்த முடியும். மேலும் எப்போதும் உங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதும் என லாரன்ஸ் அதில் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த லாரன்ஸ்

lawrence
Also Read :தேடி போய் உதவும் ராகவா லாரன்ஸ்.. இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா!
