அசுரத்தனமாக அவதாரம் எடுத்துள்ள லாரன்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

நடன இயக்குனராக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். பேய் படத்தையும் நகைச்சுவையுடன் கொடுத்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது ராகவா லாரன்ஸ் கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் என்ற படத்தில் லாரன்ஸ் நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் க்ரியேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாகியுள்ளது. லாரன்ஸ் முன்னதாக நடித்த முனி, காஞ்சனா போன்ற படங்களில் உள்ளது போல அசுர நடிப்பை ருத்ரன் படத்திலும் வெளிப்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ஆக்ரோஷம் கலந்த அசுரத்தனமாக புது அவதாரம் எடுத்து இருக்கிறார். அரக்கர்களை எல்லாம் அசுரன் வதம் செய்வது போல பலரை அடித்து தும்சம் செய்து ஒருவரின் தலையை பிடித்து இழுப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனால் ருத்ரன் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும் சண்டை காட்சிகளுக்கு மட்டும் ஒரு கோடி மதிப்பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. ருத்ரன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகயுள்ளது.

lawrence rudhran film first look poster

இந்நிலையில் ருத்ரன் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவருகிறது. இதை தொடர்ந்து லாரன்ஸ் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -