வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லால் சலாம் படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த லைக்கா

Rajini-Lal Salaam: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதையை ஐஸ்வர்யா சொன்னபோது தானாகவே முன்வந்து இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்தாராம்.

அதுவும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதற்கான புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் லால் சலாம் படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பள விபரம் வெளியாகி இருக்கிறது.

Also Read : கமல் ஒருபோதும் ரஜினியாக முடியாது, விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது.! காரணம் இதுதான்

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் சில படத்திற்கு 120 கோடி சம்பளம் பெற்ற நிலையில் படம் வெற்றி ஆனவுடன் காசோலை மற்றும் கார் ஆகியவற்றை கலாநிதி பரிசாக வழங்கி இருந்தார். மேலும் அடுத்ததாக லைக்கா, ஞானவேல் இணையும் படத்தில் ரஜினிக்கு 200 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு ஒரே படத்தால் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆனாலும் லால் சலாம் படத்தில் சில காட்சிகளில் மட்டும் தான் ரஜினி இடம்பெறுவார். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து காரணமாக ரஜினிக்கு 40 கோடி சம்பளம் லால் சலாம் படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

மேலும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ரஜினியின் லால் சலாம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கேமியோ தோற்றம் என்றாலும் ரஜினியின் புகைப்படத்தை வைத்து தான் படக்குழு பிரமோஷன் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே தொடர்ந்து சறுக்களை சந்தித்த ரஜினி இப்போது தான் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். அதற்கு எந்த பாதிப்பையும் ஐஸ்வர்யா ஏற்படுத்தாமல் இருந்தால் ரஜினி இன்னும் அசுர வளர்ச்சி அடைவார்.

Also Read : ஜெய் பீம் மாதிரி ஒரு வெற்றி வேணும், நம்ம கிட்ட 3 கதை இருக்கு தலைவரே.. ரஜினி தேர்வு செய்த தலைவர்-170 இதுதான்

- Advertisement -

Trending News