சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

Chandramukhi 2 Vs vettaiyan rajini: சந்திரமுகி இரண்டாம் பாகம் வரப்போகிறது என்றதுமே குஷியான ரசிகர்கள் ரஜினி நடிக்கவில்லை என்று தெரிந்ததும் காத்து போன பலூன் போல் ஆனார்கள். இருந்தாலும் வாசு சார் நம்மை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் படத்தை பார்த்த ஆடியன்ஸ் இப்போது தூக்கம் தொண்டையை அடைக்க நொந்து போய் இருக்கின்றனர்.

முதல் பாகம் தாறுமாறாக வெற்றி பெற்ற நிலையில் வேட்டையனாக வந்த ரஜினி, சந்திரமுகியாக மாறும் ஜோதிகா, விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வடிவேலு என ஒவ்வொருவரும் காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்தனர். ஆனால் இரண்டாம் பாகம் மொத்தமாக நம்மை சோதித்து என்ன கொடுமை சார் இது என கேட்க வைத்திருக்கிறது.

Also Read: சைக்கோ கொலைகாரனோடு மோதும் சந்திரமுகி 2.. மரண பீதி கண்ணுலயே தெரியுது மாஸ்டர்

இதற்கு முக்கிய காரணம் லாரன்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியாகவே நடந்து, ரஜினியாகவே சண்டை போட்டு என மொத்தமாக சூப்பர் ஸ்டாராகவே மாறி இருக்கிறார். இதுவே பார்ப்பவர்களின் பி.பி யை ஏற்றி இருக்கிறார். அதிலும் ஓவர் ஹீரோயிசம் பின்னடைவாக இருக்கிறது.

அதை தொடர்ந்து வடிவேலுவின் காமெடி எதுக்கு தேவையில்லாத ஆணி என்ற ரகமாக உள்ளது. முதல் பாகத்தில் ரஜினியோடு இவர் பண்ணும் அலப்பறை தியேட்டரையே கலகலக்க வைத்தது. அதை ஓவர் டேக் செய்கிறோம் என்று லாரன்ஸும் அவரும் செய்யும் காமெடி சிரிப்புக்கு பதில் கடுப்பை தான் வரவழைக்கிறது.

Also Read: லக்க லக்க லக்கா, நிஜ சந்திரமுகியின் ஆட்டம் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதேபோன்றுதான் சந்திரமுகி கதாபாத்திரமும். ஜோதிகா வெறும் டூப் தான், நீங்கதான் ஒரிஜினல் என்று கங்கனாவை அழைத்து வந்து நன்றாக அசிங்கப்படுத்தி விட்டார்கள். அவரும் காட்சிக்கு காட்சி நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் பெரிய அளவில் அது ரசிகர்கள் மனதில் நிற்காதது தான் சோகம்.

இப்படி முதல் பாகத்தின் மூலம் ரஜினி வேட்டையனாக சேர்த்து வைத்த பெருமை எல்லாம் இப்போ காத்தோடு போச்சு அந்த அளவுக்கு படத்தை பார்த்த ரசிகர்கள் கதறாத குறையாக கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் இரண்டாம் பாகத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது.

Also Read: ஜெய் பீம் மாதிரி ஒரு வெற்றி வேணும், நம்ம கிட்ட 3 கதை இருக்கு தலைவரே.. ரஜினி தேர்வு செய்த தலைவர்-170 இதுதான்

- Advertisement -

Trending News