ஜெய் பீம் மாதிரி ஒரு வெற்றி வேணும், நம்ம கிட்ட 3 கதை இருக்கு தலைவரே.. ரஜினி தேர்வு செய்த தலைவர்-170 இதுதான்

Rajinikanth: பொதுவாக ரஜினியிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னவென்றால் யாராவது புது இயக்குனர் எடுத்த படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விட்டால், அந்த இயக்குனரை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படக் கூடியவர். அப்படித்தான் ரஜினி தற்போது வெற்றியை பார்த்து வருகிறார். அதில் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் விஜய்க்கு பீஸ்ட் படம் என்று கொடுத்தார்.

அதனால் தான் ஜெயிலர் படத்தை யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன் நெல்சன் உடன் கூட்டணி வைத்தார். அத்துடன் லோகேஷ், கமலுக்கு விக்ரம் படத்தை மாபெரும் வெற்றியாக கொடுத்தார். அதனால் தான் அவரை தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு எனக்காக ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டார்.

Also read: ரஜினிக்கு முன் ஜெயிலரில் நடிக்க இருந்த ஹீரோ.. 50 கோடி கூட வசூல் ஆயிருக்காது

அடுத்ததாக இயக்குனர் டிஜே ஞானவேல், சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்று தரமான படத்தை கொடுத்தார். இந்த படம் ரஜினிக்கு பிடித்துப் போனதால் அதே மாதிரி படம் வேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டு தலைவர் 170வது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் மூன்று கதை இருக்கிறது என்று தலைவரிடம் கூறி இருக்கிறார்.

அதில் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான டிஎஸ்பி கேரக்டர். அதாவது போலீஸ் பேக்ரவுண்ட் ஸ்டோரியை வைத்து நாகர்கோயிலை சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரியாக நடிக்கும் கதை. அடுத்ததாக எஜுகேஷன் சிஸ்டத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் அநியாயங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் கதை.

Also read: தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

அடுத்தபடியாக மருந்துகளை போலியாக மாற்றும் மருத்துவர்களின் முகத்திரையை கிழிக்கும் கேங்ஸ்டர் கதையை கூறியிருக்கிறார். இப்படி ரஜினியிடம் நாட்டில் நடக்கும் உண்மையான சம்பவத்தை வைத்து படமாக எடுக்கலாம் என்று மூன்று கதையை சொல்லி இருக்கிறார். ரஜினி எந்த கதையை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதுதான் படத்தின் வெற்றியை நிர்ணயிக்க போகிறது.

ஆனால் எப்படியும் ரஜினிக்கு பிடித்தமான டிஎஸ்பி கதையை தான் அவர் தேர்ந்தெடுக்கப் போகிறார். அத்துடன் இயக்குனரிடம் ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார். அதாவது ஜெயிலர் படத்தில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் மல்டி ஸ்டார்களை நடிக்க வைத்தது தான். அந்த வகையில் தலைவர் 170 படத்திலும் மல்டி ஸ்டார்களை இறக்கலாம் என்று இயக்குனரிடம் ரஜினி கூறியிருக்கிறார்.

Also read: ரஜினி கர்நாடகா பக்கம் வரக்கூடாது.. நீ இங்க வந்தா நாக்க அறுப்போம், சீறிப்பாய்ந்த பயில்வான்

- Advertisement -