தமிழ் நாடு திரும்பி பார்க்க வைத்த ஒரு சம்பவம் சென்னையில் உள்ள பத்மஸ்ரீ சாஸ்திரி பாலா பவன் பள்ளியில் நடந்த கோர சம்பவம் தான். அப்பள்ளியில் பணியாற்றும் ராஜகோபால் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் தவறான பதிவுகளை அனுப்பியதாகவும் குற்றம்சாட்டி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அதன்பிறகு இப்பள்ளியை பற்றி அடுக்கடுக்கான பல செய்திகளை பலதரப்பினரும் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒருபக்கம் இப்பள்ளியில் நடந்த கோர சம்பவங்களையும் வெளிக்கொண்டு வருகின்றன.
இப்பள்ளியில் படிப்பதற்கு மாணவர்களுக்கு சீட்டு வாங்க வேண்டும் என்றால் 6 மாதங்களுக்கு முன்பே பள்ளி அணுகினால் மட்டும்தான் சீட்டு கிடைக்குமாம். தற்போது குட்டி பத்மினி அவரது குழந்தைக்கு இப்பள்ளியில் படிப்பதற்கான சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்று வந்துள்ளார்.
அப்போது இப்பள்ளியின் ஒய்ஜிபி தன்னை அழைத்ததால் அவரது அறைக்கு சென்றேன். என்னங்க நீங்க போய் வரிசையில் நின்று வரலாமா எவ்வளவு சீரியல் நடித்திருக்கிறீர்கள், திரைப்படங்கள் நடித்துள்ளீர்கள் நீங்கள் நேரடியாக என்னை வந்து சந்தித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
ஆனால் எப்போதும் பத்மினிக்கு யாரிடமும் போய் பள்ளிக்கு அப்ளிகேஷன் கேட்பது பிடிக்காதாம் அதனாலதான் வரிசையில் நின்று சீட்டு வாங்கியதாக கூறியுள்ளார். பின்பு இப்பள்ளியில் தன் குழந்தைகளுக்கு சீட்டு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு இவருடைய குழந்தை அம்மா உங்களை பள்ளிக்கு அழைக்கிறார்கள் என கூறியுள்ளார். குட்டி பத்மினி தன் குழந்தை ஏதாவது தவறு செய்துள்ளார்கள் என நினைத்து பள்ளிக்கு சென்றுள்ளார்.
நீங்க வருமான வரித்துறைக்கு சீரியல் பண்ணிட்டு இருக்கீங்களே அது ரொம்ப நல்லா இருக்கு, நாங்க தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமென பள்ளியின் நிர்வாக தலைவர் குட்டி பத்மினியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது நாங்கள் கொடைக்கானலில் ஒரு சொத்துமதிப்பு வாங்கி இருக்கிறோம். அது பள்ளியின் அக்கவுண்டில் வாங்காமல் வேறொரு அக்கவுண்டில் வாங்கிவிட்டோம். இதனால் வருமான வரித்துறையினர் அதிகமாக வரியை செலுத்த கூறியுள்ளனர். நீங்கள் ஏதும் உதவி செய்ய முடியுமா என கேட்டுள்ளார் என்ற விஷயத்தை வீடியோவாக பதிவிட்டு தற்போது வெளியிட்டுள்ளார் குட்டிபத்மினி.
தற்போது இப்பள்ளியில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு இப்போது எதற்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் அப்போதே சொல்லியிருந்தால் இப்பள்ளி மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என குட்டி பத்மினியை பல ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதற்கு நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும் என பல தரப்பினரும் கூறிவருகின்றனர்.