கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பாதி தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் உள்ளன.
ஏற்கனவே சொல்லியபடி தியேட்டர் ஓனர்கள் அனைவரும் பெரிய ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை நம்பியிருந்தனர் அதிலும் குறிப்பாக காங் வெர்சஸ் காட்ஸில்லா படத்தின் மீது தியேட்டர் போனவர்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.
இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே காங் வெர்சஸ் காட்ஸில்லா படம் தியேட்டர் ஓனர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் உலக அளவில் சாதனை புரிந்துள்ளது.
அதாவது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதேபோல் அந்த திரைப்படங்கள் வெளியாகி சில நாட்களிலேயே தாறுமாறான வசூலையும் பெறுகின்றன.
அந்த வகையில் கடந்த வாரம் ரிலீசான காங் வெர்சஸ் காட்ஸில்லா படம் தாறுமாறாக வசூல் வேட்டை புரிந்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் இந்தப்படம் ரூபாய் 35 கோடி வரை வசூல் செய்துள்ளது என்றும், உலகம் முழுவதும் 100 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 700 கோடியை விட அதிகம்.

இந்தப் படம்தான் கொரோனா வைரஸ்க்கு பிறகு உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தியேட்டர் ஓனர்களும் திரைத்துறையினரும் இந்தப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனராம்.