ஏழே நாட்களில் பாகுபலியை தும்சம் செய்த கேஜிஎஃப் 2.. ராஜமவுலி கொஞ்சம் ஓரமா போங்க

உலகெங்கும் கடந்த 14ஆம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரையரங்கில் அசுர வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக தளபதி விஜய்யின் பீஸ்ட் ஸ்கிரீன் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் இந்தப் படம் ரிலீஸான முதல் நாளே சுமார் 130 கோடிக்கு மேல் வசூல் சாதனையை புரிந்ததால், கூடிய விரைவிலேயே 1000 கோடி வசூலை எட்டும் என்று சினிமா விமர்சனங்கள் ஏற்கனவே கணித்து வைத்திருந்தனர்.

அதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது கேஜிஎஃப் 2 திரைப்படம், கடந்த 7 நாட்களிலேயே 676.80 கோடி வசூல் சாதனை பெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூல் சாதனை, ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி பாகம் 1 குவித்த வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது.

அதாவது பாகுபலி படம் ரிலீஸ் ஆகி செய்த ஒட்டு மொத்த வசூலையும், வெறும் ஏழே நாளில் கேஜிஎஃப் 2 திரைப்படம் முறியடித்து சாதனை படைத்திருக்கிறது. எனவே திரைத்துறையில் திரும்பிப் பார்க்க வைத்த கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து திரையரங்கில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஆகையால் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கேஜிஎஃப் 2 படக்குழுவினருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தால் கேஜிஎஃப் 3 வருவது போன்ற கதையாக இருப்பதால், நிச்சயம் கேஜிஎஃப் 3 வரும் என்பதால் அதற்காக இப்போது இருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Next Story

- Advertisement -