பல சிக்கலில் கே ஜி எஃப் 2.. குழப்பத்தில் நடிகர் யாஷ்

கன்னட சினிமாவை அனைவரும் கேலி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு கன்னட சினிமா இந்திய அளவில் பல அங்கீகாரத்தை பெற்றதும் இந்த படத்தின் மூலம்தான்.

கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாக இருந்த கேஜிஎப் 2 திரைப்படம் கொரானா சிக்கலில் சிக்கி தடுமாறியது.

அதன் பிறகு கிடைத்த கேப்பில் படத்தை முடித்து விட்டனர். ஆனால் தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் கொரானா பிரச்சினை தலைதூக்கியுள்ளதால் ரிலீஸ் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கேஜிஎப் 2 படம் ஜூலை16, 2021 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் தற்போது மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் கேஜிஎப் 2 படமும் ஒன்று. ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என ஒருபக்கம் வதந்தியை கிளப்பி விட்டதால் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

yash-cinemapettai
yash-cinemapettai
- Advertisement -spot_img

Trending News