Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் 

சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திய கவினை திட்டி தீர்த்த தயாரிப்பாளர்.

dada-kavin

Actor Kavin: ஒரு படம் மட்டும் ஓடிவிட்டால்  தங்களுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்து விடுகிறார்கள். அதிலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற கவின் ஒரு சில படங்களில் நடித்தாலும் லிப்ட் மற்றும் டாடா  படங்கள்தான் அவரைத் தூக்கி விட்டது. அதிலும் கணேஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

இதனால் கவின் தன்னுடைய சம்பளத்தையும் 2 கோடியாக உயர்த்தினார். இது மிகவும் தவறான விஷயம். ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கு இன்னும் கொஞ்சமாக தான் சம்பளத்தை ஏற்ற வேண்டும். அதிரடியாக 2 கோடி கேட்பதெல்லாம் நிலைத்து நிற்கும் ஹீரோக்களுக்கு அறிகுறி கிடையாது என்று கவினை பிரபல மூத்த தயாரிப்பாளரான கே ராஜன் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Also Read: லாரன்ஸ் படத்துல வாய்ப்பு வேணும்னா கிஸ் அடிச்சு காமி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடந்த கொடுமை

இவர் கவினை மட்டுமல்ல தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி போன்றோரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏனென்றால் இவர்கள் எல்லாம் 100 கோடிக்கு மேல்  சம்பளம் வாங்குவதால் படத்தின் பட்ஜெட்டும் தாறுமாறாக எகிறிகிறது. இதனால் தரமான படங்கள்  வெளிவராமல் போகிறது என்றும்  பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் விலாசுகிறார்.

ஆனால் அக்கட தேசத்தில் இருக்கும் ஹீரோக்கள் ரொம்பவே ஜென்டில்மேன் ஆக இருக்கின்றனர். ராம்சரண் நடித்த படம் ஒன்று தோல்வியை சந்தித்தது. உடனே அவர் தன்னுடைய சம்பளத்தின் பாதியை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இதே போலவே தான் அவருடைய அப்பா சிரஞ்சீவியும் செய்திருக்கிறார்.

Also Read: பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

அதே போலவே தெலுங்கு பிரபல நடிகர் ஆன பிரபாஸ் நடித்த படம் ஒன்று பயங்கர பிளாப் ஆனது. உடனே பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் அதை வாங்க மறுத்திருக்கிறார். இதை நான் உங்களுக்கு கொடுக்கவில்லை, என்னை நம்பி படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூசர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார். இப்படித்தான் மனசாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதிரடியாக சம்பளத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கக் கூடாது என்று கே ராஜன் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பகிரங்கமாக சாடுகிறார்.

Also Read: பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

Continue Reading
To Top