வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

5 Celebrities Are Currently Living In A Rented House:பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கை முறை இப்படி தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு கணிப்பு இருக்கிறது. அதாவது பெரிய பங்களா, கார் என்று ஒரு வசதியான வாழ்க்கை தான் அவர்கள் வாழ்வதாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு 5 பிரபலங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

பார்த்திபன் : இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்ட பார்த்திபன் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே பார்த்திபன் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அதில் தான் செலவிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் தனக்கு சொந்தமாக வீடு கூட வாங்காமல் இருந்து வருகிறார்.

Also Read : ளசுகளை குறிவைத்து களமிறங்கும் பார்த்திபன்.. அடுத்த சர்ச்சைக்கு போட்ட பிள்ளையார் சுழி

மாரிமுத்து : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார் இயக்குனர் மாரிமுத்து. இவர் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்ட இருக்கிறார்.

கஞ்சா கருப்பு : ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தவர் கஞ்சா கருப்பு. தான் சம்பாதித்த பணத்தின் மூலம் பெரிய பங்களா கட்டி இருந்தார். ஆனால் படம் தயாரிப்பதாக போய் சொத்து அனைத்தையும் இழந்து விட்டார். இப்போது வாடகை வீட்டில் தான் கஞ்சா கருப்பு வசித்து வருகிறார்.

Also Read : எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

ஷகிலா : கவர்ச்சி நடிகை ஆக இளைஞர்களை கிரங்கடித்த ஷகிலா ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இவர் சம்பாதித்த பணங்கள் எல்லாமே பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்த பந்தங்களிடம் கொடுத்து வைத்திருந்தார். கடைசியில் அவர்கள் ஷகிலாவை ஏமாற்றி விட்டனர். இதனால் ஆரம்பம் முதல் இப்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

கவின் : டாடா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறார் கவின். இவர் பெரிய படங்களில் நடித்து தன் சம்பாதித்த பண மூலம் தான் வீடு வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் இப்போது வரை வாடகை வீட்டில் வசித்து வரும் கவின் பிக் பாஸ் வீட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு மூன்று மாதம் இருந்திருக்கிறார்.

Also Read : பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

- Advertisement -

Trending News