புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லாரன்ஸ் படத்துல வாய்ப்பு வேணும்னா கிஸ் அடிச்சு காமி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடந்த கொடுமை

Pandian Stores Serial Actress: ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு வெள்ளை வெளேர்னு இருக்கக்கூடிய ஒரு தங்கச்சி கதாபாத்திரத்திற்கான ஆடிஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையை வலுக்கட்டாயமாக கிஸ் அடிக்க சொல்லி இருக்கின்றனர்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் விஜே தீபிகா, சமீபத்தில் ராகவா லாரன்ஸ் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்த அந்தப் படத்தின் இயக்குனர் தீபிகாவிடம் இந்த படத்தில் கருப்பாக இருக்கும் ராகவா லாரன்ஸ்-க்கு வெள்ளையாக ஒரு தங்கச்சி இருக்கிறார்.

Also Read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. மொத்தத்தையும் வாரி சுருட்டிய ஒரே சேனல்

இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் கச்சிதமாக பொருந்துவீர்கள். இதை நீங்கள் பண்ணலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார். அடுத்த நிமிடமே இந்த படத்தில் அந்த தங்கச்சி கேரக்டருக்கு ஒரு முத்த காட்சி இருக்கிறது. அதை இப்போது நீங்கள் எனக்கு பண்ணி காட்ட வேண்டும் என்று அவருக்கு முத்தம் கொடுக்க சொல்லியிருக்கிறார். உடனே தீபிகா அந்த அறையில் யாருமே இல்லை, இப்படி தன்னிடம் தகாதவாறு பேசுகிறாரே என்று அந்த பட வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அந்த படத்தில் இயக்குனர், ‘நான் ராகவா லாரன்ஸ் இடம் பேசிக்கொள்கிறேன், அவர் நான் சொன்னால் கேட்டுக் கொள்வார். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த சீன் உங்களுக்கு வேண்டாம் என்று படத்தில் இருந்து தூக்கி விடுகிறேன். நீங்கள் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என்று தீபிகாவிடம் வழிந்திருக்கிறார்.

Also Read: சிக்கலான பிரசவத்தை சந்திக்கும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

அதன் பின் தீபிகா, ‘நான் வேறு ஏதாவது காட்சியை நடித்துக் காட்டவா ‘என்று கேட்க, உடனே அவர் இதற்கு முன்பாக எட்டு பேரை ஆடிஷன் செய்துவிட்டேன். எட்டு பேரும் எனக்கு முத்தம் கொடுத்திருக்கின்றனர். ஒருவேளை நீங்கள் மட்டும் அந்த காட்சியை நடித்துக் காட்டாமல் உங்களை தேர்வு செய்து விட்டால், அவர்களுக்கு எல்லாம் செய்யும் துரோகம் ஆகிவிடும்.

ஆகையால் நீங்களும் எனக்கு முத்தம் கொடுத்து விடுங்கள் என்று பெரிய தியாகி போலவே பேசினாராம். உடனே விஜே தீபிகா அந்த நபரை முறைத்து விட்டு அங்கிருந்து எழுந்து வந்து விட்டாராம். இவ்வாறு பட வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும்போது பல கசப்பான நிகழ்வுகள் தனக்குது நேர்ந்திருக்கிறது என்று சமீபத்திய பேட்டியில் புலம்பித் தவிக்கிறார்.

Also Read: சினிமாவை விட சீரியலில் கொள்ள லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.. 100 கார்களை மாற்றி கொடிகட்டி பறக்கும் பப்லு

- Advertisement -

Trending News