fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கவினுக்கு ஜோடியான விஜய் பட நடிகை.. யார் தெரியுமா?

kavin vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவினுக்கு ஜோடியான விஜய் பட நடிகை.. யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார். ஏற்கனவே ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆகாஷ் வாணி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.

bigil-reba-monica

bigil-reba-monica

மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கும் இத்தொடருக்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப்தொடரை சோனியா ராம்தாஸ் தயாரிக்கிறார்.

தற்போது சினிமாவில் படங்களை விட வெப் தொடர்களே அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களும் புதிய வெப் தொடர்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top