புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சக்தி போல் மனைவிக்கு தோள் கொடுக்கப் போகும் கதிர்.. கடைசியில் ஒன்னும் இல்லாமல் நிற்கும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது கதிரின் மாற்றத்தை பார்ப்பதற்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கிறது. அதுவும் அண்ணன் குணசேகரனை எதிர்த்துப் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தரமாகவும் எதார்த்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி ஹீரோவாக மாறி வருகிறார் கதிர்.

தர்ஷினியை காணவில்லை என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் குணசேகரன் என்னமோ யார் வீட்டு குழந்தையோ காணவில்லை என்பது போல், ஜீவானந்தத்திடம் தான் ஈஸ்வரி அனுப்பி வைத்திருக்கிறார் என்று புத்தி மழுங்கி சொன்னதுக்கு மேலேயே சொல்லிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை விசாரிக்கிறார்கள். அத்துடன் கரிகாலனை வெளுத்து வாங்கும் அளவிற்கு போலீசார் பின்னி பெடல் எடுக்கிறார்கள். பார்ப்பதற்கு நமக்கு பாவமாக இருக்கிறது. அந்த அளவுக்கு கரிகாலனை போட்டு அடிக்கிறார்கள். இருந்தாலும் காணாமல் போனது ஒரு பெண் குழந்தை என்பதால் போலீசாருக்கும் ஒரு பயம் பதட்டத்துடன் விசாரிக்கிறார்கள்.

Also read: சன் டிவி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்.. கையும் களவுமாக பிடித்து கைது பண்ணிய போலீஸ்

இங்கே வந்த குணசேகரன் எந்தவித பதட்டமும் இல்லாமல் அவர்களை வெளியே விட சொல்கிறார்கள். அதற்கு போலீஸ், இப்ப நடக்கிற சூழ்நிலையை சுட்டிக்காட்டி ஒரு விஷயங்களை முன் வைக்கிறார். இதனைக் கேட்ட கதிர் முகம் அப்படியே மாறிப் போய்விட்டது. அத்துடன் கதிருக்கும் பயம் வந்துவிட்டது.

அதனால் அண்ணன் குணசேகரனிடம், நம்ம குழந்தையை போய் தேடிப் பார்ப்போம் என்று பாசத்துடன் சொல்கிறார். ஆனால் குணசேகரன் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப கரிகாலனிடம் என் பொண்ணு உனக்கு தான் என்கிற மாதிரி புத்தி இல்லாமல் பேசுகிறார். இதனைக் கேட்டு கோவமான கதிர், குணசேகரனை எதிர்த்து பேசுகிறார்.

அதற்கு குணசேகரன், கதிரை குத்தி காட்டி மட்டம் தட்டி பேசுகிறார். ஆக மொத்தத்தில் என்ன பட்டாலும் இந்த குணசேகரன் மட்டும் திருந்த வாய்ப்பே இல்லை. கடைசி வரை ஒன்றும் இல்லாமல் தனி மரமாக நிக்க போகிறார். பாவம் இனியாவது கதிர் முழுமையாக திருந்தி சத்திய போல் கட்டின மனைவி நந்தினி மீது பாசத்தை வைத்து தோள் கொடுத்து வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்து தர்ஷினியை கூட்டிட்டு வரப்போகிறார்.

Also read: சங்கடம் கொடுக்கும் ரெண்டு சீரியல்கள் ஒன்று சேரும் சங்கமம்.. இது என்னடா கதிருக்கும் எழிலுக்கும் வந்த சோதனை

- Advertisement -

Trending News