தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஓப்பனிங் நமக்கு கிடைக்காதா என ஏங்கும் அளவுக்கு தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கார்த்திக். பருத்திவீரன் படத்தை போல ஒரு ஓப்பனிங் படம் வேறு எந்த நடிகருக்குமே கிடைத்தது கிடையாது.
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வசூலிலும் தாறுமாறு வெற்றி தான் இந்த படத்திற்கு. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து கிடக்கிறது.
கார்த்தியை தாண்டி பிரியாமணியின் முத்தழகு, குட்டி சாக்கு, சித்தப்பா, டக்ளஸ் கஞ்சா கருப்பு, கார்த்தியின் அப்பத்தா, பிணந்திண்ணி கதாபாத்திரம், பொன் வண்ணனின் கழுவதேவன் போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தவர் பஞ்சவர்ணம் அப்பத்தா. இவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டாராம். அந்த வருத்தத்தை கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கார்த்தி கூறியதாவது, பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்த பருத்திவீரன் படத்தில் நடித்து வரும் ஒரு கதாபாத்திரம் மட்டுமே கார்த்திக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரங்களாக அமைந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரையும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு என கருதி வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
