ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 9, 2025

கண்மணியை தட்டி தூக்கிய மாப்பிள்ளை.. புகைப்படத்துடன் உறுதி செய்த பிரபலம்

செய்திவாசிப்பாளர் கண்மணி தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் மாலை முரசு, ஜெயா நியூஸ், நியூஸ் 18, காவேரி நியூஸ் போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மாடலிங் துறையில் இருந்து வந்த கண்மணி சேகர் சன் டிவியில் தன்னுடைய தனித்துவமான பேச்சாற்றலால் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கண்மணி சன் நியூஸ் லைவ்விலும் பணியாற்றியுள்ளார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளதால் இவரது செய்திகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கண்மணி சேகர் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுவருவார். அந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும்.

இந்நிலையில் கண்மணி சேகர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீனை காதலித்து வருகிறார். இதயத்தை திருடாதே தொடரின் மூலம் நவீனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உண்டு.

நவீன் மலையாளத்தில் மணிரத்னம் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

kanmani segar
kanmani segar

தற்போது நவீன் மற்றும் கண்மணி இருவரும் காதலித்து வருவது அவர்கள் ரசிகர் மத்தியில் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Trending News