புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கனகாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரின் மகனுக்கு ஏற்பட்ட கொடுமை.. கண்கலங்க வைக்கும் கதை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனகாவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்துள்ளன. அதிலும் அவரை பிரபல நடிகரின் மகன் ஒருதலையாய் காதலித்து உயிர் விட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தில் மூலம் மிகப் பெரிய பெயரையும் பாராட்டையும் பெற்ற கனகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கலந்த வேடமாக இருந்தாலும் சரி, கனகாவுக்கு நிகர் கனகா தான்.

பல வெற்றிப்படங்களை கொடுத்த குறிப்பிட்ட ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாளராக பிரபல நடிகர் எஸ் ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கனகாவுக்கு அனைத்து எடுபிடி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கனகாவை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். அந்த கால கட்டங்களில் கனகா சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.

ஆனால் அந்த உதவி இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய தந்தையை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமையில் சுற்றி வந்துள்ளார். இதைப் பார்த்த பலரும் எச்சரித்த நிலையில் விடாமல் கனகாவை துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார். அவருடைய படப்பிடிப்புக்கு செல்வது, கனகாவின் வீட்டின் முன்பு நின்று அவரைப் பார்க்கத் துடிப்பது என ஏகப்பட்ட வேலைகள் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கனகா உடனடியாக காவல்துறையிடம் கூறி ராமச்சந்திரனை எச்சரித்துள்ளார். அதன்பிறகு கனகா கிடைக்க மாட்டார் என்கிற சோகத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்த ராமச்சந்திரன் இறுதியில் மாரடைப்பு வந்து இறந்து விட்டாராம். அதன் பிறகு அதை நினைத்து கனகா வருத்தப்பட்டாராம்.

kanaga-cinemapettai-01
kanaga-cinemapettai-01
- Advertisement -spot_img

Trending News