கமல் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்.. வெற்றி இயக்குனரை தூது விட்டும் பிரயோஜனமில்லை

விஜய் தற்போது வம்சி இயக்கும் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதையடுத்து அவரின் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்தக் கூட்டணியில் உருவாகப் போகும் இந்த படத்திற்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதி பூஜை போட இருக்கிறார்கள்.

இதே தேதியில்தான் மாஸ்டர் திரைப்படத்திற்கும் பூஜை போடப்பட்டது. கடந்த வருடம் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த சென்டிமென்ட் அடிப்படையில்தான் அதே தேதியில் பூஜை போட லோகேஷ் கனகராஜ் விரும்பியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் கசிந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாக போகும் இந்த படத்திற்கு உலக அளவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் மூலம் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலுக்கு மிகவும் பிடித்த நபராக மாறியிருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் கமல் அவரிடம் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.

அதாவது கமல் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக நிறைய படங்களை தயாரித்துள்ளார். தற்போது பல திரைப்படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கும் கமலுக்கு, விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது.

இதனால் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கிடைத்த நட்பின் காரணமாக அவர் லோகேஷ் கனகராஜ் இடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறி விஜய்யிடம் தூது அனுப்பி இருக்கிறார். அவரும் கமலுக்காக ஹைதராபாத்திற்கு தற்போது விஜய்யை பார்க்க பறந்துள்ளார்.

அங்கு அவர் விஜயிடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறி அவருடைய சம்மதத்தை கேட்டு இருக்கிறார். அதற்கு விஜய் கட்டாயம் கமல் தயாரிப்பில் படம் பண்ணலாம். ஆனால் இந்த படம் வேண்டாம், அடுத்த படம் செய்யலாம் என்று கூறியதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய் தன்னுடைய 68 வது திரைப்படத்தை கமலுக்கு கொடுக்க பச்சைக்கொடி காட்டி உள்ளதாக தெரிகிறது.

Next Story

- Advertisement -