தேர்தலில் விட்ட 200 கோடியை சினிமாவில் 500 கோடியாக மாற்றிய கமல்.. அடுத்தடுத்து வெளியாகும் 6 படங்கள்

கமலஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நூலிழையில் தோல்வியைத் தழுவியது அனைவருக்குமே வருத்தத்தை கொடுத்தது. முதல் தேர்தலை சந்தித்தாலும் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினார்.

கமல்ஹாசன் பிரச்சாரத்தில் இருக்கும்போதே இந்த தேர்தலுக்கு வருவதால் எனக்கு 200 கோடி நஷ்டம் தான் எனவும், இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இதற்கு வந்தேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த 200 கோடியை பல நூறு கோடிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் கமல் ஹாசன். அந்த வகையில் 80, 90களில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாரோ அதை விட இரண்டு மடங்கு சுறுசுறுப்பாக சினிமாவில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டாராம்.

kamal-hassan-cinemapettai
kamal-hassan-cinemapettai

அந்த வகையில் கமலஹாசன் கையில் அரை டஜன் படங்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜின் விக்ரம், ஜீது ஜோசப் இயக்கும் பாபநாசம் 2, கமல் முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம், கமல் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இயக்கத்தில் உருவாகி பாதியில் நின்ற தலைவன் இருக்கின்றான் படத்தையும் மீண்டும் தூசி தட்ட உள்ளாராம். இந்தியன் 2 படம் வேறு பாதியில் நிற்கிறது. அதுபோக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 போன்ற அனைத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

இதனால் தேர்தலில் விட்டதை வெகுவிரைவில் மீட்டெடுத்து விடுவாராம் கமலஹாசன். கடந்த சில வருடங்களில் கமல்ஹாசன் பெரிய அளவு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் ரஜினியை போல மடமடவென பல படங்களில் நடிக்க உள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்