கமல் நடிப்பில் வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. அத்து மீறியதால் சென்சார் போர்டு வச்ச ஆப்பு

4 வயதில் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும் போது, அவருடன் இணைந்து நடித்த நடிகைகளுடன் முத்த காட்சிகளில் கண் கூசும் அளவுக்கு நடித்து, இளசுகளின் ரொமான்டிக் ஹீரோவாக ரவுண்டு கட்டினார். ஆனால் அப்படிப்பட்ட படங்களுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தால் பரவாயில்லை. அவருடைய அதிரடியான படங்களுக்கும் தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் வழங்கியது. ஏனென்றால் ஏ சர்டிபிகேட் அடல்ஸ் ஒன்லி கண்டெண்டுக்கு மட்டும் கொடுப்பதில்லை. அது படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக இருந்தாலும் கொடுக்கப்படும். 

சிம்லா ஸ்பெஷல்: 1982 ஆம் ஆண்டு  கமலஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான  இந்தப் படமும் உலகநாயகன் நடிப்பில் வெளியான அதிரடி  திரைப்படம் ஆகும். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சில அதிரடி சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் படத்திற்கு ஏ சர்டிபிகேட்டை பெற்று தந்தது. இந்த படத்தில் கமல் மற்றும் எஸ்வி சேகர் நண்பர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கமலுக்கு எஸ்வி  சேகர் செய்த துரோகம் தெரிய வருகிறது. இருப்பினும் கமலஹாசன் எஸ்வி சேகரின் நலனுக்காக  சில விஷயத்தை பொறுத்துக் கொள்கிறார். கடைசியில் அவர்களுக்கிடையே இருக்கும் மனக்கசப்பு சரியாகிவிடும்.

ஒரு கைதியின் டைரி: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமலஹாசன் உடன் ரேவதி ஜோடியாக நடித்திருப்பார். தன்னுடைய மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க அலையும் தந்தை மற்றும் அவரை தடுக்கும் போலீஸ் அதிகாரி மகன் இருவரைப் பற்றியது தான் இந்த படத்தின் கதை. கிரைம் திரில்லர் திரைப்படம் ஆக வெளியான, இந்த படம் முழுக்க டமால் டுமீல் என சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருந்ததால், சென்சார் போர்டு இந்த படத்திற்கு அதிரடியாக ஏ சர்டிபிகேட்டை வழங்கியது.

Also Read: பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

வெற்றி விழா: 1989 ஆம் ஆண்டு கமலஹாசன், பிரபு, அமலா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கும் சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் வழங்கியது. ஏனென்றால் இதிலும்  கமல் வில்லன்களுடன் அதிரடியாக சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் சென்சார் போர்ட் ஏ சர்டிபிகேட் கொடுத்து ஆப்பு வைத்தது.

குருதிப்புனல்: 1995 ஆம் ஆண்டு கமலஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கும் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திலும் காவல்துறைக்கும், தீவிரவாதிகளுக்கும் கடுமையான யுத்தம் நடைபெறும். இதனால் அதிரடியான சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெற்றதால் தணிக்கை குழு இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியது.

Also Read: சத்யராஜை வளர்க்க கமல் போட்ட திட்டம்.. நட்புக்காக சொந்த செலவில் செய்த உதவி

ஹேராம்: 2000 ஆம் ஆண்டில் உலக நாயகன் கமலஹாசனை எழுதி இயக்கிய தயாரித்த படம் ஹேராம். இந்த படத்தில் இந்து, முஸ்லிம்களுக்கு இடையே  1940களில் நிலவிய மதரீதியான கருத்து வேறுபாடு மற்றும் மகாத்மா காந்தியை குறித்த பல விஷயங்களை பேசி இருப்பார்கள். இதில் நடக்கும் கலவரங்களை கொடூரமாக காட்டியிருப்பதால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.  

இவ்வாறு இந்த ஐந்து படங்களிலும் எந்தவித கவர்ச்சியான காட்சிகள் இடம்பெறாவிட்டாலும் அதிரடியான சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம் பெற்றதால் இந்த படங்களுக்கு தணிக்கை குழு ஏ சர்டிபிகேட்டை வழங்கி ஆப்பு வைத்தது.

Also Read: புளுகுரதுல இது வேற ரகம்.. அதுவும் அவங்க ஆவியுடன் பேசி நினைத்ததை சாதித்த எஸ் வி சேகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்