கமலுடன் கூட்டணி போடும் பா ரஞ்சித்.. அந்த படத்தின் சாயலில் உருவாகும் தரமான கதை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற பத்தல பாடல் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்தப் பாடல் கமலின் குரலில் மட்டுமல்லாமல் வரிகளிலும் உருவாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். விழா மேடையில் பேசிய பா ரஞ்சித் விரைவில் நானும் கமலுடன் பணியாற்ற இருக்கிறேன் என்ற தகவலை கூறினார்.

மேலும் இப்படம் மதுரையை மையமாகக் கொண்டு உலகநாயகனின் விருமாண்டி படத்தின் ஸ்டைலில் உருவாக்கப்படயுள்ளது என்று கூறியுள்ளார். இந்தச் செய்தி கமல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. ஆர்யா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் படத்தை பா ரஞ்சித் இயக்கயுள்ளார் என்றும் இப்படத்தின் பெயர் மைதானம் எனவும் கூறப்பட்டது.

தற்போது பா ரஞ்சித், கமல் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற பிரபலங்களின் பெயர் அடுத்தடுத்து வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்