கமலின் இந்த 2 படம், ஏண்டா படம் தயாரிக்க வந்தோம்னு ஆயிடுச்சு.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு வெற்றிகரமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல் அவர் கொடுத்த சில தோல்விப் படங்களால் அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்த சம்பவம் நிறைய நடந்துள்ளது.

கமல்ஹாசன் எப்போதுமே மற்ற இயக்குனர்கள் மற்றும் நடிகர்களையும் தாண்டி காலம் கடந்து யோசிப்பவர். அதன் காரணமாகவே கமலஹாசன் நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு புரியாமல் போய் தோல்வியை சந்தித்தது.

அதிலும் குறிப்பாக ஆளவந்தான் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, போட்டதில் பாதி கூட வராத நிலைமை. ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என அப்போதே தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

தாணுவை போலவே தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த பி எல் தேனப்பன் என்பவர் கமலஹாசன் நடித்த இரண்டு படங்களை தயாரித்து பல கஷ்டங்களை சந்தித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கமலை வைத்து முதன்முதலில் காதலா காதலா என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததால் மீண்டும் கமலை வைத்து பம்மல் கே சம்பந்தம் மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய படங்களை தயாரித்தாராம் தேனப்பன்.

panjathandhiram-kamal
panjathandhiram-kamal

ஆனால் இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்து தயாரிப்பாளர் தேனப்பனை பெரிய கடனாளி ஆகி விட்டதாம். இன்று கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் படத்தைப் பலரும் ரசிக்கையில் அன்றைய காலகட்டத்தில் அந்த படம் பலருக்கும் புரியாமல் போனதால் பஞ்சதந்திரம் படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என படத்தை தயாரித்தவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு படத்தின் தோல்விகளால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்