விக்ரம் படம் எல்லாம் ஒன்றுமே இல்லை.. அதைவிட மலைக்க வைக்கும் சாதனையை செய்த கமல்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் இந்த விக்ரம் திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கமல் ரசிகர்கள் மற்றும் விக்ரம் பட குழுவினர் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 68 வயதாகும் கமல் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை செய்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

கமல் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே புதுப்புது விஷயங்களை செய்வதில் மிகவும் கில்லாடி. அந்த வகையில் தன் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் புதுமையான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.

அதனால்தான் அவர் பல ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலுக்கு இந்த சாதனைகள் எல்லாம் புதிது கிடையாது. அவர் சினிமாவில் போடாத வேடங்களும் இல்லை, சம்பாதிக்காத பணமும் இல்லை.

அப்படி சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் சினிமாவிலேயே விட்டுவிட்டார் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் அவர் சொந்தப்படம் எடுக்க பணத்தை தண்ணீராகச் செலவழித்தார். அதற்கான பலனாக தான் தற்போது விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் கமல் ஆளவந்தான் படத்தில் எப்படி ஒரு தோரணையாக இருந்தாரோ அதே போன்ற ஒரு கெத்து இப்போதும் அவரிடம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுதான் விக்ரம் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

ஆனால் கமல் செய்த ஒரு சாதனையை வைத்து பார்க்கும்போது இந்த விக்ரம் படத்தின் சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. ஏனென்றால் அவர் தன்னுடைய நற்பணி மன்றம் சார்பாக கிட்டத்தட்ட நாலரை லட்சம் லிட்டர் ரத்த தானம் செய்திருக்கிறார்.

இதை கமலே இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரஸ்மீட்டில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். தற்போது கமல் புரிந்திருக்கும் இந்த சாதனையை கேள்விப்பட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்