ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பாதி படப்பிடிப்பில் வந்த சண்டை.. கமலை உதாசீனப்படுத்தி விட்டு கிளம்பிய நடிகை

70, 80 களில் ஹீரோயின்கள் அதிகம் போட்டி போடுவது ரஜினி, கமல் படத்திற்கு தான். அதிலும் பெரும்பாலும் கமலின் படங்கள் தான் காதல் கதைகளாக இருக்கும். இதனால் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இதனால் பல நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு கமல் படத்தில் நடிப்பார்கள்.

ஆனால் கமலின் சூப்பர் ஹிட் படத்தில் ஒரு நடிகை பாதி சூட்டிங் முடிந்த பின்பு, தான் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு விலகிவிட்டாராம். கமலுடன், அந்த நடிகை பல படங்களில் நடித்துள்ளார். இதனால் அவருடன் நல்ல நட்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்குள் காதல் என்றெல்லாம் அப்போதைய செய்தித்தாள்களில் கிசுகிசுக்கப்பட்டது.

அந்த நடிகை தான் ரேகா. ஜிஎன் ரங்கநாதன் இயக்கத்தில் 1981 இல் வெளியான மீண்டும் கோகிலா படத்தில் கமலஹாசனும், ரேகாவும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் கமலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரேகா இப்படத்தில் நடிக்க மாட்டேன் வேறொரு நடிகையை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம்.

அதன் பின்புதான் ஸ்ரீதேவி அந்த படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டானது. அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் ஸ்ரீதேவி பெற்றார். மேலும் தற்போது வரை கமலஹாசனுக்கு இணையான ஜோடி என்றால் அது ஸ்ரீதேவிதான் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில் 1986ல் வெளியான புன்னகை மன்னன் படத்தில் கமலஹாசன், ரேகா இருவரும் மீண்டும் இணைந்த நடித்திருந்தனர். இப்படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றிருந்தது. அதாவது கமலஹாசன் குன்றிலிருந்து குதிக்கும் முன் ரேகாவிற்கு முத்தமிடுவார்.

ஆனால் ரேகாவின் அனுமதியின்றி இந்த காட்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சின்ன காட்சி ஆக இருந்தாலும் தன் அனுமதியின்றி எப்படி கமலஹாசன் முத்தமிட்டார் என்ற ரேகாவின் வீடியோ அப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன்பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரேகா பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News