திருப்தியடையாத கமல்.. இப்படி எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்டால் எப்படி பாஸ்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் வரும் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆடியோ ரிலீசை மிகவும் மிகப்பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக நேரு ஸ்டேடியம், லீலா பேலஸ், ஐடிசி சோழா என்றெல்லாம் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு யோசித்துக் கொண்டிருந்தனர. ஆனால் கமலுக்கு தரம்தான் முக்கியம். அதனால் இப்பொழுது பல விஷயங்களை யோசித்து வருகிறார். அதற்கான பலத்த ஏற்பாட்டையும் கமல் செய்திருக்கிறார்.

இங்கே புரோகிராமை நடத்தினால் அந்த அளவு இருக்கு ஆடியோ மற்றும் டால்பி சப்தங்கள் மக்கள் காதுக்கு சரியாக போய் சேராது. இதுவே படத்திற்கு ஒரு பெரிய நெகட்டிவாக அமையும் என்று யோசித்த கமல். இதற்கு சத்யம் தியேட்டரை தேர்ந்தெடுத்து அங்கே டால்பி சவுண்டில் பங்க்ஷன் நடத்தலாம் என திட்டமிட்டிருக்கிறாராம்.

ஆனால் அந்த குறுகிய இடத்திற்குள் எப்படி நிறைய பேர் சாத்தியம் என்றுதான் யோசித்து வருகின்றனர். இப்படி தரத்தை மட்டுமே எதிர்பார்க்கும் கமல் பல விஷயங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆனால் படக்குழுவினர் திரளான ரசிகர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்புகின்றனர்.

அப்படிப் பார்த்தால் நேரு ஸ்டேடியம், லீலா பேலஸ், ஐடிசி சோழா இந்த மூன்று இடங்கள் தான் சரியாக இருக்கும். ஆகையால் கொஞ்சம் யோசித்துப் பாருங்களே என விக்ரம் படக்குழுவினர் கமலை விடாது வலியுறுத்துகின்றனர்.

ஆனால் கமல் மனதில் ஆடியோ லான்ச்சில் குறைவான நபர்கள் பங்கேற்றாலும் பாடல் அவர்களிடம் சிறப்பாக சென்றடையும் என்றக் கருத்தில் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என அதே நிலையில் நிற்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்