கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கொலைவெறியுடன் பார்க்கும் கமல்.. மிரட்டலான விக்ரம் பட புதிய போஸ்டர்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான தோல்வி படத்தின் டைட்டில் தான்.

முன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் கமல்ஹாசன் எலக்சனில் பிசியாக இருந்ததால் திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் தொடங்க முடியவில்லை.

தற்போது அனைத்தும் முடிந்ததால் மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் கமலஹாசன். அந்த வகையில் விக்ரம் படம் உருவாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் படங்களில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால் விக்ரம் படத்தில் அவர் எதிர்பார்த்த பணியாளர்கள் பலரும் விலகி புதிய புதிய பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் விருப்பமான கேமராமேன் சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படத்தில் கேமராமேனாக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்றே தெரிகிறது.

இந்நிலையில் கமல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 62 வருடங்கள் ஆனதை புதிய போஸ்டர் மூலம் கொண்டாடியுள்ளார் லோகேஷ். அதில் ரத்தம் சொட்டும் வாலுடன் கொலைவெறி பார்வையில் உள்ள கமல் புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

lokesh-kanagaraj-cinemapettai
lokesh-kanagaraj-cinemapettai

Next Story

- Advertisement -