கமலுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்த ரஜினி பட வில்லன்.. கார் பார்க்கிங்கில் கதறி அழுத சம்பவம்

கமலஹாசன் இயக்கத்தில் ஷாரூக்கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் ஹேராம். இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படத்தில் கமலஹாசனுக்கு உதவியாளராக நவாசுதீன் சித்திக் பணியாற்றினார்.

ஹிந்தியில் வரும் வசனங்களை சக கலைஞருக்கு நவாசுதீன் சித்திக் சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆசையை கமலஹாசன் பார்த்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தை கமலஹாசன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் படத்தை கமலஹாசன் தயாரிக்க உள்ளார். அதனால் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த சிவகார்த்திகேயன் மேடையிலேயே ஹே ராம் படத்தின் நீளம் கருதி நவாசுதீன் சித்திக் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. அதனால் அவருடைய காட்சி ஒன்று கூட படத்தில் இடம் பெறவில்லை என்று கூறினார்.

இப்படத்தில் முதல்முறையாக நடித்து இருக்கிறேன் என்ற ஆசையுடன் தனது நண்பர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு நவாசுதீன் திரையரங்குக்கு வந்துள்ளார். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இடம்பெறாததாலும், மேலும் நண்பர்கள் முன்பும் அவமானம் பட்டதால் மனம் உடைந்து கார் பார்க்கிங்கில் உட்கார்ந்து அழுதுள்ளார்.

அப்போது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நவாசுதீன் சித்திக் அழுவதை பார்த்து உள்ளார். அதை வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் ஸ்ருதிஹாசன் சொல்லியுள்ளார். அதன்பிறகு நவாசுதீன் சித்திக்யிடம் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் சில காட்சிகள் நீக்கம் வேண்டியிருந்தது.

இது சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது, இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கமலஹாசன் கூறியுள்ளார். அதன்பிறகு நவாஸுதீன் சித்திக் பல படங்களில் நடித்து விருதுகளை வாங்கியுள்ளார். கமல்ஹாசனால் ஒரு நடிகர் கார் பார்க்கிங்கில் உட்கார்ந்து அழுத சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்