27 ஆண்டுகள் கழித்து கமலுடன் இணையும் உச்ச நட்சத்திரம்.. வெளிவந்த விக்ரம் பட சஸ்பென்ஸ்

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பொக்கிஷமாக இருப்பவர் கமல்ஹாசன். இன்றளவும் கமல்ஹாசன் திறமைக்கு யாராலும் ஈடுகட்ட முடியவில்லை. கமல்ஹாசன் சிறு குழந்தையாக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.

நடிகராக அறிமுகமான கமல்ஹாசன் நாளடைவில் இயக்குனரானார் பின்பு பாடகர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமையை கொண்டு பல சாதனைகளை படைத்தார். அன்றைய காலத்திலேயே அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். மற்ற நடிகர்களை போல கமல்ஹாசன் படத்தினுடைய வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் அவரிடம் இருக்கும் திறமைக்கு ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்திருப்பார்.

ஆனால் கமல்ஹாசன் படத்தின் வெற்றியை தாண்டி பல அற்புதமான படைப்புகளை படைக்க வேண்டும் என நினைத்தார். அதனால்தான் இவரது திரை வாழ்க்கையில் வெற்றிப்படங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை தோல்விப் படங்களை மட்டுமே பலரது கவனத்திற்கு வருகின்றன. இப்போதும் கமல்ஹாசனுக்கு அடையாளமாக சொல்லக்கூடிய படங்கள் என்றால் ஹேராம் அன்பே சிவம் போன்ற படங்கள் தான்.

தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் ரசிகனான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆனால் தற்போது அமிதாப்பச்சன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் தான் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் சண்டைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் அடுத்து முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்க இருப்பதாகவும் இப்படமும் கமலஹாசனுக்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது முத்தையா இயக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்