புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விக்ரம் படத்தால் கமலுக்கு வந்த நெருக்கடி.. விடாமல் டார்ச்சர் செய்யும் தயாரிப்பாளர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒரு தரமான வெற்றியை ருசி பார்த்ததுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசை பார்த்து திரையுலகமே தற்போது வாயடைத்து போய் உள்ளது.

அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தின் வெற்றியால் ஆண்டவர் வேற லெவலுக்கு சென்று விட்டார். அந்த தொடர்ந்து அவர் இப்போது வேறு சில திட்டங்களையும் போட்டு செயல்படுத்துவதற்கு தயாராகி விட்டார். அதன்படி கமல் தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தூசி தட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது தயாரிப்பு நிர்வாகம். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தனர்.

ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது. மீண்டும் அந்தத் திரைப்படம் தொடங்கப்படுவதற்கான அறிகுறியும் இல்லாமல் இருந்தது. அதனால் பொறுத்து பொறுத்து பார்த்த சங்கர் இது வேலைக்காகாது என்று தற்போது ராம் சரணை வைத்து படம் இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.

கமலும் தற்போது பல ப்ராஜெக்ட்களில் கமிட்டாக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் யோசித்த தயாரிப்பு நிர்வாகம் தற்போது ஷங்கரை சமாதானப்படுத்தி மீண்டும் படத்தை இயக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அவரும் தன்னுடைய உழைப்பு வீணாகி விடக்கூடாது என்று ஒரு வழியாக அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் கமல் தான் சற்று யோசித்து வருகிறாராம். இதனால் பயந்து போன தயாரிப்பு நிர்வாகம் அவருக்கு பேசிய சம்பளத்தை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுக்க முன்வந்துள்ளதாம். இதனால் கமல் இந்த விஷயத்தை ஏற்பதா அல்லது பின்வாங்குவதா என்ற ஒரு குழப்ப நிலையில் இருக்கிறாராம். ஆனாலும் தயாரிப்பு தரப்பு எப்படியாவது அவரை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News