டாப் 10 படத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்ட கலைஞர் டிவி.. சிம்மாசனம் போட்டு முதலிடத்தில் சூர்யா

TRP rating of the top 10 films: என்னதான் திரையரங்குகளில் புதுப்புது படங்களை பார்த்தாலும், அந்தப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுது குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே பார்க்கும் சுகமே தனி சுகம் தான். அப்படி கலைஞர் டிவியில் வெளிவந்த படங்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை பிடித்த படங்களை பற்றி தற்போது புள்ளி விவரத்துடன் வெளியாகி இருக்கிறது.

இதில் பத்தாவது இடத்தில் இருப்பது கடந்த ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படம். இப்படம் மக்களின் பேவரைட் படமாக மாறியதால் 2.16 ரேட்டிங் பெற்றிருக்கிறது. அடுத்து ஒன்பதாவது இடத்தில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் டிஆர்பி-யில் 2.23 ரேட்டிங்கை பெற்று இருக்கிறது.

இதனை அடுத்து எட்டாவது இடத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக அமைந்ததால் டிஆர்பி ரேட்டிங்கில் 2.63 இடம் பெற்று இருக்கிறது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை1,  ஏழாவது இடத்தை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் 2.64 இடத்தை பெற்றிருக்கிறது. அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டாகுஸ்தி ஆறாவது இடத்தை பெற்று 2.82 புள்ளிவிவரத்தை அடைந்திருக்கிறது.

Also read: லீக்கானது ஜேசன் சஞ்சய்- கவின் படத்தின் ஸ்டோரி.. சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா.?

அடுத்ததாக கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படம் ஐந்தாவது இடத்தைப் பெற்று சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து என்ஜாய் பண்ணும் படமாக வெற்றி பெற்றதால் 3.45 டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று இருக்கிற. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படம் நான்காவது இடத்தை அடைந்து 3.63 புள்ளி விவரத்தை பெற்றிருக்கிறது.

இதனை அடுத்து பிரதீப் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே படம் மூன்றாவது இடத்தை பிடித்து 5.22 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இருக்கிறது. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இந்த காலத்திலும் பேய் படத்திற்கு வரவேற்பு இருக்கிறது என்பதை காட்டும் விதமாக சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த அரண்மனை 3 படம் டிஆர்பி ரேட்டிங்கில் 5.23 இடத்தைப் பெற்று இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி எப்பொழுதுமே என்னுடைய படம் தேசிய விருதும் வாங்கிவிடும், முதலிடத்தில் வந்துவிடும் என்று சிம்மாசனத்தில் இருக்கிறார் சூர்யா. அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் படமாக வெற்றி பெற்றதால் டிஆர்பி ரேட்டிங்கில் 6.15 இடத்தை அடைந்திருக்கிறது. இப்படி இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு கலைஞர் டிவியில் போடப்பட்டு அதிக மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படங்களாக வெற்றி பெற்றிருக்கிறது.

Also read: அஜித்துக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி.. பலிகிடா ஆகும் ரஜினி, சூர்யா விசுவாசிகள்

- Advertisement -spot_img

Trending News