அஜித்துக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி.. பலிகிடா ஆகும் ரஜினி, சூர்யா விசுவாசிகள்

Ajithkumar: பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்று பொதுவாக ஒரு பழமொழி சொல்வது உண்டு. இப்போது அஜித்துக்கு எதிராக நடக்கும் நச்சு சம்பவங்களை பார்க்கும் பொழுது, அந்த பழமொழி தான் ஞாபகம் வருகிறது. அவர் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தன்னுடைய வேலையை ஒழுங்காக பார்த்தால் கூட அவரை வம்புக்கு இழுக்காமல் சிலர் இருக்க மாட்டார்கள்.

நாட்டில் என்ன நடந்தாலும் அஜித் அதுக்கு என்ன செய்தார் என்பதுதான் சமூக வலைத்தளத்தில் பெரிய கேள்வியாக இருக்கும். அதே போன்று எந்த ஹீரோ ஹிட் படம் கொடுத்தாலும், அஜித்தின் படம் தோல்வி அடைந்தது சுட்டிக்காட்டி பேசி தான் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள் சில முக்கிய ஹீரோக்களின் ரசிகர்கள். இதனால் தான் அஜித் எனக்காக என் ரசிகர்கள் எதுவுமே செய்ய வேண்டாம் என அறிக்கை எல்லாம் விடுகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அவரை எப்படி எல்லாம் டேமேஜ் செய்யலாம் என ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. போதாத குறைக்கு சென்னை மழை வெள்ளத்தின் போது விஜய் மக்கள் இயக்கம் செய்ததெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. டேமேஜ் ஆகும் விஜய் பெயரை சரி செய்ய, கூட்டு சேர்த்துக் கொண்டு அஜித் பெயரை தேவையில்லாமல் டேமேஜ் செய்ய சில கூட்டம் சதி செய்து கொண்டிருக்கிறது.

Also Read:அஜித் வாய்ஸ்க்கு தடையாக இருந்த தயாரிப்பாளர்.. கூடவே இருந்து உதவிய நடிகை

சமீபகாலமாக ரஜினி மற்றும் விஜய்க்கு நடுவே போட்டி நிலவுகிறது என்ற சூழல் உருவானபோது, அஜித் ரசிகர்கள் மொத்தமாக ரஜினி பக்கம் சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதேபோன்று பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அத்தனை பேருமே அஜித்துக்கு ஏகபோகமாக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் தான்.

சமூக வலைத்தளத்தில் நடக்கும் வேலை

கடந்த சில தினங்களாக நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்துக் கொண்டு நிறைய பேர் ரஜினியை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாகி கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் ரஜினியை பற்றி தவறாக பேசுபவர்கள் அஜித் ரசிகர்கள் கிடையாதாம்.

அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பிரச்சனையைக் கிளப்ப விஷமிகள் செய்யும் அபத்தமான வேலைதான் இது. இடையில் சூர்யாவை பற்றியும் தப்பு தப்பாக பேசி அவருடைய ரசிகர்கள் பக்கமும் கொளுத்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அஜித் அமைதியாக இருக்கும்போது, அவரை தேடி தேடி இப்படி சில்மிஷ வேலைகள் செய்து இன்னும் அவருக்கு நல்ல பெயர் தான் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பது இந்த விஷமிகளுக்கு தெரிவது இல்லை.

Also Read:அஜித்திடம் இருக்கும் தரமான குணம்.. இதை மட்டும் கத்துக்கிட்டா விஜய் தான் அடுத்த CM