உண்மையைச் சொல்லி கமலுக்கு சவால் விட்ட பாடலாசிரியர்.. விக்ரம் பட பாடலில் வந்த குழப்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகியிருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கமல் பொதுவாக பாட்டு பாடுவதில் வல்லவர். அவருடைய பல படங்களில் கமலஹாசன் பாடல்கள் பாடி உள்ளார். அதிலும் சென்னை பாஷையில் கமல் பாடும் பாடல்கள் பட்டையைக் கிளப்பும். அதேபோல் இந்தப் பத்து தல பாடலும் நார்த் மெட்ராஸ் ஸ்டைலில் பாடி உள்ளார்.

கமல் கிராமம் முதல் மெட்ராஸ் வரை எல்லா பாஷைகளுமே சரளமாக பேசக்கூடியவர். எந்தப் பாஷை கொடுத்தாலும் அதை பின்னி பெடல் எடுப்பார். ஏற்கனவே நிறைய படங்களில் கமல் தன் சொந்த குரலில் பாடியுள்ளார் என்றாலும் இந்த பாட்டை அவரே எழுதி பாடியிருக்கிறார் என்பது சிறப்பம்சம்.

கமலஹாசன் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த காதலா காதலா படத்தில் காசு மேல காசு வந்து என்ற பாடலை பாடி ஆடி இருப்பார். இவ்வாறு அவர் குரலில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெறும். ஆனால் இப்போது பாடலாசிரியர் கபிலன், கமல் பாடியது நார்த் மெட்ராஸ் பாஷை இல்லை என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

நார்த் மெட்ராஸ் பகுதியில் வேறு மாதிரியான பாசைகள் பேசுவார்கள். மேலும் கமலுக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் ஆழ்வார்பேட்டையில் தான் இந்த பாஷையை அதிகம் பேசுவார்கள். ஆனால் இதுவும் வேற ஒரு நடைமுறையில் இருக்கிறது என்று பாடலாசிரியர் கபிலன் கூறுகிறார்.

மேலும், இது எந்த பாஷை என்று கமல் கண்டுபிடித்து சொல்லட்டும் என்று சவால் விட்டு வருகிறார். கமல் நான் எந்த பாஷையில் பாடினாலும் பாடல் நன்றாக வந்துள்ளது, மக்களுக்கும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். மேலும் நார்த் மெட்ராஸ் பாஷை எது என்பதையும் தற்போது கமல் தேடி வருகிறாராம்.

Next Story

- Advertisement -