ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் வெளியாகி 12 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. இந்த படத்தின் 2ஆம் பாகத்தில் சல்லி மற்றும் அவரது புதிய குடும்பம் மற்றும் பண்டோராவை ஒரு புதிய அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் அவர்களின் முயற்சிகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அவதார் 2 டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படங்களின் அடுத்த பாகங்கள் முறையே இரண்டு ஆண்டுகள் இடைவேளையில் டிசம்பரில் வருகிற 2022 ஆம் ஆண்டு முதல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே, தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியின் கதைக்களத்தைப் பற்றி எந்த செய்தியையும் கூறாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த மிகப்பெரிய படைப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அறிவியல் புனை கதையாக இரண்டாம் பாகம் அவதார் படம் வெளியாகி கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் டிரெய்லர் சினிமா கோன் என்ற தனியார் நிகழ்ச்சியில் வெளியிட அந்த படம் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 25 முதல் வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து படத்தின் டிரெய்லரை சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனராம்.
இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வரும் ஜேம்ஸ் கேமரூன், உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார். டைட்டானிக், டெர்மினேட்டர், ஏலியன்ஸ் போன்ற பெரிதும் வெற்றி பெற்ற படங்களை இயக்கியவர். இந்த படத்தை உலகிலுள்ள கிட்டத்தட்ட 160 மொழிகளில் வெளியிட இவர் திட்டமிட்டுள்ளார்.
2009களின் அவதார் உலக பாக்ஸ் ஆபிஸில் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. முதல் படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக தொடர்வதால், அதன் தொடர்ச்சிகள் பற்றிய எதிர்பார்ப்பும் சலசலப்பும் பல வருடங்களாக அதிகமாகவே உள்ளது. இந்த படங்கள் வெளிவந்து தான் அவதார் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.