ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

ஷங்கர் போல் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது கண்ணியமும் வேண்டும்.. அட்லியின் சிறுபிள்ளை ஆட்டிட்யூட்

ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்த தளபதி விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படத்தை கொடுத்த அட்லி, அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இப்போது ஷங்கரைப் போல் சம்பளம் வாங்குவது மட்டுமல்லாமல் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என அவருடைய எண்ணம் சரி என்றாலும், அவரிடம் இருக்கும் மோசமான ஆட்டிட்யூட் தற்போது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

மேலும் 8 வருடங்களுக்குப் பின் அட்லியின் மனைவி பிரியாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜய் புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தை தொடர்ந்து அவர் தற்போது தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: காதலுக்கு கண்ணில்லை என்பதை நிருபித்த 5 நட்சத்திர தம்பதியினர்.. அழகை பார்க்காமல் கரம் பிடித்த அட்லி-பிரியா

இந்தப் படத்திற்குப் பிறகு அட்லி விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்குகிறார். அந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி எனவும் அதற்காக ஷங்கருக்கு நிகராக அட்லிக்கு கொடுக்கப்படும் சம்பளம் 50 கோடி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி சின்ன வயதில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரையே ஓவர்டேக் செய்துவிட்டார் என்ற சலசலப்பு தான் கோடம்பாக்கம் முழுவதும் எதிரொலிக்கிறது. இவர் ஷங்கர் அளவிற்கு சம்பளம் வாங்கினாலும் இவரது ஆட்டிட்யூட் என்னமோ சிறுபிள்ளைத்தனமாக தான் இருக்கிறது.

Also Read: வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

இன்று வரை ஷங்கர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு தனியாகத்தான் வருவார். ஆனால் அட்லியோ ஒரு கூட்டத்தோடு வருவார். அதில் 10 பவுன்சர்கள் இருப்பார்கள். இந்த பவுன்சர்களுக்கு எல்லாம் தயாரிப்பாளர்கள்தான் காசு கொடுபார்களாம். இவ்வளவு அலப்பறை அவசியமானது என்றும் அட்லியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

இது ஒரு மோசமான ஆட்டிட்யூட் அட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு நெருக்கடிகள் வரப்போகிறது இல்லையே. ஏன் இப்படி செய்கிறார் தன்னை பெரிய ஆள் போல் காட்டிக் கொள்கிறார் என்று அட்லியைப் பற்றி தெரிந்தவர்கள் பலரும் வசை பாடுகின்றனர்.

Also Read: 8 வருட கனவு, உச்சகட்ட சந்தோஷத்தில் பிரியா அட்லி.. ட்விட்டரில் வைரலாகும் கற்பகால புகைப்படங்கள்

- Advertisement -spot_img

Trending News